Tuesday, April 23, 2024
Home » வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் புதுவருட கடமையேற்பு

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் புதுவருட கடமையேற்பு

by mahesh
January 3, 2024 10:30 am 0 comment

வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள கொழும்பு 1 இலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 2024 ஜனவரி 1ஆம் திகதி அரசின் சகல ஊழியர்களும் மக்களுக்கான சேவைக்காக தன்னை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வீடமைப்பு அலுவலகத்தில் அலுவலக சேவைகள் (01) காலை சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரஜிவ் சூரியராச்சி மற்றும் பணிப்பாளர்கள், பொதுமுகாமையாளர், பொறியியலாளர்கள், பிரதி பொது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இங்கு உரையாற்றிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்; எமது நிறுவனம் கடந்த காலங்களில் மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாக இருந்து வந்தது. தற்போது எமது நிறுவனத்தில் உள்ள 1800 ஊழியர்களும் 24 மாவட்டங்களிலும் உள்ள வீடமைப்புக் காரியாலயத்திலும் உள்ள ஊழியர்கள் இணைந்து இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றிக் கொள்வதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் கொவிட் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் எமது நிறுவனத்தினால் குறிப்பிட்ட சேவையை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாமல்போய்விட்டது. 1200 மில்லியன் ரூபாய்களை இந்த அதிகார சபையின் நன்மைக்காக சேமித்து வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

அஷ்ரப் ஏ சமத்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT