உலகக் கிண்ண குழாமுக்கு திமுத் கருணாரத்ன தலைவர் | தினகரன்

உலகக் கிண்ண குழாமுக்கு திமுத் கருணாரத்ன தலைவர்

உலகக் கிண்ண குழாமுக்கு திமுத் கருணாரத்ன தலைவர்-Dimuth Karunaratne Lead SL Team for World Cup

கிரிக்கெட் உலகக்கிண்ணத்திற்கான, இலங்கை கிரிக்கெட் அணிக்கு இலங்கை அணியின் இடது கை துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன தலைமை தாங்குவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால்  பரிந்துரைக்கு அமைய, தொலைத்தொடர்பாடல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலககிண்ண தொடருக்கான அணிகளை அதில் பங்குபற்றும் நாடுகள் வெளியிட்டு வரும் நிலையில், இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கான தலைவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...