Friday, March 29, 2024
Home » தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் செலிங்கோ லைஃப்

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் செலிங்கோ லைஃப்

by mahesh
January 3, 2024 8:30 am 0 comment

செலிங்கோ லைஃப் இந்த வாரம் இலங்கையில் பிராண்ட் எக்ஸலன்ஸ் என்ற ‘எவரெஸ்ட்டை” வென்றது. கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி திங்கட்கிழமை, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (SLIM) விருதுகளில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் என்ற விருதினையும் மேலும் மூன்று தங்கங்களையும் வென்றுள்ளது.

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையின் முன்னணி நிறுவனமான செலிங்கோ லைஃப், ‘ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக முத்திரை”, ‘ஆண்டின் சிறந்த உள்ளூர் வர்த்தக நாமம்” மற்றும் ‘ஆண்டின் Agile வர்த்தக நாமம்” எனத் தெரிவுசெய்யப்பட்டதுடன், வெள்ளி ‘மதிப்புமிக்க CSR பிராண்ட்”க்கான வெள்ளி விருதையும் வென்றுள்ளது.

‘தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அனைத்து துறைகளிலும் நாட்டின் தலைசிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று செலிங்கோ லைஃப் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் அறிவித்தார். ‘பிராண்ட் மதிப்பீடு இதை விட சிறந்த அளவுகோல் இருக்க முடியாது, மேலும் இது ஒரு வருடத்தில் பன்முக சவால்களை எதிர்கொண்டது என்பது இந்த பாராட்டை குறிப்பிடத்தக்கதாக ஆக்குகிறது. இந்த விருது எங்கள் சந்தைப்படுத்தல் குழுவிற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு செலிங்கோ லைஃப் ஊழியருக்கும் ஒரு சமர்ப்பணம் எனவும் குறிப்பிட்டார்.”

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT