Friday, April 19, 2024
Home » மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நாம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும்

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நாம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும்

புத்தாண்டு கடமை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவிப்பு

by mahesh
January 3, 2024 11:20 am 0 comment

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நாம் அனைவரும் அவர்களின் தேவைகளை இனங்கண்டு சேவைகளை வழங்க வேண்டும் என வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

மாகாணத்தில் கடமையாற்றும் அரச சேவையாளர்கள் தமது கடமைச் செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் நிகழ்வு (01) ஆளுநர் மஹிபால ஹேரத் தலைமையில் மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ரண் மாவத்” வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதனூடாக மாகாணத்தில் அதிகமான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். நாம் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு திடசங்கற்பம்பூண வேண்டுமென ஆளுநர் மேலும் தெரிவித்தார். இதன் போது வடமத்திய மாகாண (புதிய) பிரதான செயலாளர் வருண சமரதிவாகர உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT