Thursday, April 25, 2024
Home » TAGS விருதுகள் 2023 இல் மூன்று தங்க விருதுகளை வென்ற கொமர்ஷல் வங்கி

TAGS விருதுகள் 2023 இல் மூன்று தங்க விருதுகளை வென்ற கொமர்ஷல் வங்கி

by mahesh
January 3, 2024 8:00 am 0 comment

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட விருதுகள் திட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் சிறந்து விளங்கும் CA ஸ்ரீ லங்காவின் 2022 ஆம் ஆண்டிற்கான TAGS விருதுகள் 2023 இல் கொமர்ஷல் வங்கி மூன்று தங்கங்களையும் ஒரு வெண்கலத்தையும் வென்றது.

கூட்டாண்மை ஆளுகை வெளிப்பாடு (Corporate Governance Disclosure) மற்றும் டிஜிட்டல் மாற்று அறிக்கை (Digitally Transformative Reporting) அறிக்கையிடல் ஆகியவற்றிற்காக வங்கி அனைத்து துறைகளிலும் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு, பிரதான பிரிவு விருதுகளில் இரண்டு தங்கங்களையும் வங்கித் துறையில் சிறந்த வருடாந்த அறிக்கைக்கான தங்க விருதினையும் பெற்றதோடு கூட்டாண்மை அறிக்கையிடலில் பொதுநிலையான உறுதித்தன்மைக்கான வெண்கல விருதினையும் வென்றுள்ளது.

இந்த விருதுகள் குறித்து கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கருத்துத் தெரிவிக்கையில் “இந்த மதிப்புமிக்க விருதுகளை வென்றெடுப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். TAGS விருதுகள் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் அவை வெளிப்படுத்தும் மிக முக்கியமான நான்கு தூண்களில் கவனம் செலுத்துகின்றன. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை வங்கியின் முக்கிய மதிப்புகளில் உட்பொதிக்கப்பட்டுள்ளன, மேலும் கொமர்ஷல் வங்கி தனது வருடாந்த அறிக்கையைத் தயாரிக்கும் போது இந்தப் பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.

கொமர்ஷல் வங்கியின் வருடாந்த அறிக்கைகள் பல வருடங்களாக உள்ளூர் மற்றும் பிராந்திய விருதுகளுடன் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. CA ஸ்ரீலங்காவினால் நிதி அறிக்கையிடலில் சிறந்து விளங்கியதற்காக வழங்கிய Cyril Gardiner Memorial விருதை 10 தடவைகள் பெற்றுள்ளதுடன் CA ஸ்ரீலங்கா வழங்கிய சிறந்த வருடாந்த அறிக்கைக்கான Edmund Cooray Memorial விருதை 17 சந்தர்ப்பங்களில் வென்றுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான கொமர்ஷல் வங்கியின் வருடாந்த அறிக்கையானது, உலகின் மிகப்பெரிய வருடாந்த அறிக்கை போட்டியான 2023 MerComm ARC விருதுகளில் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT