Friday, April 19, 2024
Home » விரிவாக்கப்பட்ட சேவைகளுடன் மீள ஆரம்பிக்கப்பட்ட நீர்கொழும்பு புனித ஜோசப் மருத்துவமனை
விரிவாக்கப்பட்ட சேவைகளுடன் மீள ஆரம்பிக்கப்படும்

விரிவாக்கப்பட்ட சேவைகளுடன் மீள ஆரம்பிக்கப்பட்ட நீர்கொழும்பு புனித ஜோசப் மருத்துவமனை

- மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள்

by mahesh
January 3, 2024 7:30 am 0 comment
  • வெளிநோயாளர் சேவைகளுக்கு காப்புறுதியை ஏற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது வைத்தியசாலைஏனைய தனியார் மருத்துவமனைகளை விட 30% குறைவான கட்டணம அறவிடுவதன் மூலம் சமூக நலனுக்கான அர்ப்பணிப்பு
  • குழந்தைகள் நலத் திட்டங்கள், இலவச சுகாதார கிளினிக்குகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றில் நிதியை முதலீடு செய்வதோடு, ​​அனைவருக்கும் தரமான மற்றும் கட்டுப்படியான விலையிலான மருத்துவ சேவைக்கு முன்னுரிமை அளிக்கிறது

நீர்கொழும்பு புனித ஜோசப் மருத்துவமனை மீண்டும் திறக்கப்படுவதாக,  & Teens Medical Group, Asia Corp Holdings மற்றும் Healthy Life Clinic ஆகியன இணைந்து அறிவித்துள்ளன. அண்மையில் இவ்வைத்தியசாலையை இந்நிறுவனங்கள் கொள்வனவு செய்ததைத் தொடர்ந்து, இலங்கையின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மருத்துவமனையின் மருத்துவ வளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளின் விரிவான அபிவிருத்தி, புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்நோயாளிகளுக்கான கட்டில்களின் விரிவாக்கம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உள்ளக மருத்துவர்களின் எண்ணிக்கை 45 ஆக கணிசமாக அதிகரிப்பு, இரண்டு அதிநவீன சனலிங் மையங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய 27 சனலிங் அறைகள், கண் அறுவை சிகிச்சை மையம், அவசர அம்பியூலன்ஸ் சேவை மற்றும் விசேட குழந்தைகள் வார்டுகள் உள்ளிட்டவை இந்த விரிவான மறுசீரமைப்பில் உள்ளடங்குவதோடு, இந்த அனைத்து வசதிகளும் நான்கு மாடிகளில் பரந்துபட்டதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த விஸ்தரிப்பின் மூலம், எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் பரந்தளவிலான நோயாளிகளுக்கு அவசரமான மற்றும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவ பராமரிப்பு தொடர்பில், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புனித ஜோசப் மருத்துவமனை நிலைநிறுத்தப்படுகிறது.

வைத்தியசாலையின் மீள ஆரம்பிக்கும் வகையிலான விரைவான மேம்படுத்தல்கள் மற்றும் வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் புத்தாக்கமான முயற்சிகள் தொடர்பில் கருத்துகளைத் தெரிவித்த புனித ஜோசப் வைத்தியசாலையின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுனில் டி சில்வா, “நீர்கொழும்பில் அதிகரித்து வரும் மருத்துவ சேவைக்கான தேவையை நிவர்த்தி செய்ய, அதிக திறன் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உட்கட்டமைப்புடன், நீர்கொழும்பு புனித ஜோசப் மருத்துவமனையை மீண்டும் திறப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். மேம்படுத்தப்பட்ட வளங்கள், உட்கட்டமைப்பு மற்றும் அவசர மருத்துவ நிலைமைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சிகிச்சைகளுக்கான வசதிகள் ஆகியவற்றில் எமது மறுசீரமைப்பானது கவனம் செலுத்தியுள்ளதோடு, இவை அனைத்தும் உலகளாவிய மருத்துவத் தரங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என்றார்.

ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் புனித ஜோசப் மருத்துவமனை உறுதி பூண்டுள்ளது. வைத்திய நிபுணர் ஜேன் ஸ்ரீ டி சில்வா MD, FAAP அவர்களது மேற்பார்வையில் இயங்கும் இம்மருத்துவமனையானது, அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, பல் சிகிச்சை, உடல் சிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தை நலன், உளவியல் சேவைகள், உணவுமுறை உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகிறது. ஒப்பிட முடியாத சுகாதார சேவையை வழங்குவதற்காக மருத்துவமனை கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, இரக்க குணம் கொண்ட அதன் அணுகுமுறை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு ஆகியவற்றினால் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் விரிவான அணுகுமுறை தொடர்பில் கருத்துத்தெரிவித்த சுனில் டி சில்வா, “இலங்கையின் சுகாதார உட்கட்டமைப்பில் முதலீடு செய்து அதனை மேம்படுத்துவதே எமது மூலோபாய அணுகுமுறையாகும். அந்த வகையில், 51 கட்டில்களை உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்ட ஒரு புதிய மருத்துவமனைப் பிரிவு சேர்க்கப்படுவதைத் தொடர்ந்து, புனித ஜோசப் மருத்துவமனையானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதிப் பகுதிக்குள் நீர்கொழும்பில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையாக மாற உள்ளது. உயர்தர சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனையின் உபகரணங்கள் குறிப்பாக அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இங்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் குறிப்பிடும்படியானவை அமெரிக்காவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகளுக்கான காப்புறுதியை ஏற்றுக்கொள்ளும் இலங்கையின் முதலாவது வைத்தியசாலையாக நீர்கொழும்பு புனித ஜோசப் வைத்தியசாலை அமைகின்றது.” என்றார்.

நிபுணர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக தங்களது தாய் நிறுவனமான Kids & Teens Medical Group மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்களுடன் ஆலோசனையை பெற வசதி வழங்கி, நோயாளிகள் தங்கள் மருத்துவ அறிக்கைகளை ஒன்லைனில் அனுப்புவதற்கு வசதி வழங்குவதன் மூலம், இம்மருத்துவமனையானது ஒரு தனித்துவமான சேவையை வழங்குகிறது. இந்த திட்டங்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையின் விரிவான மருத்துவ பராமரிப்பு வசதிகளின் வலைமைப்புடன் இணைய வழிவகுக்கின்றது.

மேற்கத்திய சுகாதாரத் தரங்கள் மற்றும் அது தொடர்பான செயற்றிறனுக்கான மருத்துவமனையின் அர்ப்பணிப்பு தொடர்பில் சுனில் டி சில்வா தெரிவிக்கையில், “எமது சுகாதார கட்டமைப்புத் தொகுதியானது, செயற்றிறன் மற்றும் செயற்பாடு ஆகிய அம்சங்கள் தொடர்பில் தனித்துவமாக விளங்குகிறது. மேம்பட்ட சுகாதார அறிக்கை மற்றும் பகுப்பாய்வுகளுக்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதி நவீன டிஜிட்டல் X-கதிர் ஆய்வகம் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வுகூட வசதிகளை கொண்டுள்ளது. புனித ஜோசப் மருத்துவமனையானது, குழந்தைகள் நல திட்டங்கள், இலவச சுகாதார கிளினிக்குகள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளிட்ட விடயங்களில் நிதியை மீள முதலீடு செய்தல் மற்றும் அனைவருக்கும் தரமான மற்றும் கட்டுப்படியான கட்டணத்தில் சுகாதார சேவையை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கிறது. எமது சமூகத்திற்கும் இலங்கை மக்களுக்கும் சேவை செய்வது எமக்கு மிக முக்கியமானதாகும். கட்டுப்படியான விலையில் தரமான சுகாதார சேவையை வழங்குவதே எமது நோக்கமாகும். எமது கட்டணங்கள் ஏனைய தனியார் வைத்தியசாலைகளை விட 30% குறைவானதாகும்.” என அவர் உறுதிப்படுத்தினார்.

விசேட மருத்துவ வழிகாட்டலை எளிதாக அணுகுவதை உறுதி செய்யும் வகையில், Telehealth மற்றும் chat ஆலோசனைச் சேவைகள் மூலம் சுகாதாரப் பாதுகாப்பின் எதிர்காலத் தேவையை மருத்துவமனை கொண்டுள்ளது. புனித ஜோசப் மருத்துவமனையானது, 24 மணி நேரமும் அவசர சேவைகள் மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகளை வழங்குவதன் மூலம், 24 மணி நேரமும் இயங்குகின்றது. உயர் விசேடத்துவம் வாய்ந்த சிகிச்சைக்கான விரைவான அணுகலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இம்மருத்துவமனையானது மருத்துவர் சனலிங், அவசர சிகிச்சை, telehealth மற்றும் chat மூலம் ஆலோசனை உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது. நீர்கொழும்பு புனித ஜோசப் மருத்துவமனையானது, இலக்கம் 229/10, புனித ஜோசப் வீதியில் அமைந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: https://stjosephhospital.lk/

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT