Wednesday, April 24, 2024
Home » ‘களனி சக்தி’ மின் பொறியியல் பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவக் குழுக்கள் இரண்டுக்கு சான்றிதழ்

‘களனி சக்தி’ மின் பொறியியல் பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவக் குழுக்கள் இரண்டுக்கு சான்றிதழ்

by mahesh
January 3, 2024 6:30 am 0 comment

இலங்கையில் முதல்தர பாதுகாப்பான மின் கேபிள்(வடம்) விநியோகஸ்த்த நாமம் கொண்ட ‘களனி கேபிள்ஸ்’ PLC நிறுவனம் தனது முன்னணியும் விருதுக்குரியதுமான சமூக சேவை திட்டமொன்றான ‘களனி சக்தி’ ஒரு வருட மின் பொறியியல் பாட நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த இரண்டு மாணவக் குழுக்களுக்கு ஒரே நேரத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய முன்தினம் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. ‘களனி கேபில்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்,திரு. மஹிந்த சரணபால, இணைத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். அணில் முனசிங்க மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் திரு. ஸ்ரீசற்குணராஜா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இச்சான்றிதழ் வழங்கும் வைபவம் ‘களனி சக்தி’ மின் பொறியியல் பாடநெறியின் நான்காவது மற்றும் ஐந்தாவது குழு மாணவர்களுக்கானதே. இவ் வைபவத்திற்கு விசேட அழைப்பினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயளாலர் ஆர். கேதீஸ்வரன் மற்றும் வட மாகாண மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் திரு எஸ். பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுய தொழில் நோக்கமாக மின் பொறியியல் கற்கை நெறியினை தேர்ந்தெடுத்த மற்றும் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்களுக்காக வேண்டியும் நடாத்தப்படும் இவ் ஒரு வருடகால மின் பொறியியல் பாட நெறியிற்கு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படுவதுடன் 200 மாணவர்கள் கொண்ட இப்பாட நெறியின் 6வது மற்றும் 7வது குழுக்களுக்கான ஆட்சேர்ப்பும் இந்நிகழ்வின்போது இடம்பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT