Tuesday, April 23, 2024
Home » Srilanka Institute of Architects மூன்றாவது காலாண்டு மாநாடு

Srilanka Institute of Architects மூன்றாவது காலாண்டு மாநாடு

by mahesh
January 3, 2024 6:00 am 0 comment

இலங்கை கட்டிட கலைஞர்கள் நிறுவகத்தின் (Srilanka Institute of Architects) மூன்றாவது காலாண்டு மாநாடு Macktiles மற்றும் Multilac நிறுவனங்களின் அனுசரணையில் பங்களிப்புடன் நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மெக்டைல்ஸ் கூட்டு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மிஸ்வர் மகீன் மற்றும் பணிப்பாளர்களான மிஸா மிஸ்வர், இஸ்மாயில் ஹுஸைன் ஆகியோர் கட்டட கலைஞர் நிறுவகத்தின் (SLIA) தலைவர் ரோஹன பண்டார ஹேரத்திடம் ஸ்மார்ட் போர்ட் கையளித்தனர். மல்டிலக் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் மிஹிரான் ஓபாத்த நிகழ்வில் உரையாற்றுகையில்:

தரம் மற்றும் நீடித்து நிலைத்திருப்பதில் மல்டிலக்கின் அர்ப்பணிப்பை வலியுறுத்தி அதன் தனித்துவமான சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகளையும் தெளிவுபடுத்தினார். IPEN முறைமையிலான பாதுகாப்பான சான்றிதழுடன் தேசத்தின் பாதுகாப்பான பெயின்ட் என்ற நிலையை அவர் தெளிவு படுத்தி உயர்த்திக் காட்டினார்.

உற்சாகத்துடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் குலுக்கல் முறையில் தெரிவான ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு மல்டிலக்,மெக்டயில்ஸ் மற்றும் ஹவுஸ் ஒப் கிப்ட்ஸ் வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT