கீரிமலையில் ஆயுதங்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல் | தினகரன்

கீரிமலையில் ஆயுதங்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

யாழ். கீரிமலைப் பகுதியில் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட நால்வரை, எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இவர்களை நேற்று (15) மாலை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இச்சந்தேக நபர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து,  வீதி ரோந்து நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமாக கூடிநின்ற குறித்த நால்வரையும் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

3கத்திகள், ஒரு கைக்கோடரி, ஒரு ஸ்குரூட்வைர், சுத்தியல் ஆகியவற்றுடன்,  20ரூபா நாணயத்தாள்கள் 200மற்றும் 100ரூபா,  500ரூபா,  1,000ரூபாவென நாணயத்தாள்கள் 19,500ரூபாவையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கீரிமலையிலுள்ள கோவிலொன்றில்   உண்டியல் உடைத்துத் திருடிய சம்பவம்  மற்றும்  சில தினங்களுக்கு முன்னர் பிரதேச சபைக்குச் சொந்தமான விளம்பரப் பதாகை சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் இச்சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

(புங்குடுதீவு குறூப் நிருபர் - பாறுக் ஷிஹான்)


Add new comment

Or log in with...