கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரிக்கை | தினகரன்

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரிக்கை

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தருமாறு அரசாங்கத்தை கோரும் கையெழுத்து சேகரிப்பு நேற்று முன்தினம் (14) கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றது

கல்முனை பிரதேச பொதுமக்கள், பொது அமைப்புகள்,  இளைஞர்கள் இணைந்து கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் 30வருடங்களாக தரம் உயர்த்தப்படாமலுள்ள நிலையிலேயே, இப்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பான கோரிக்கையை முன்வைத்து  தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபவனி இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி  மட்டக்களப்பிலிருந்து நடைபவனி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், தமது கோரிக்கை அடங்கிய மனு மற்றும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துகள் எதிர்வரும் 22ஆம் திகதி அம்பாறை கச்சேரியில் கையளிக்கப்படவுள்ளது.

(காரைதீவு குறூப் நிருபர் சகா)


Add new comment

Or log in with...