புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துகளினால் 415 பேர் வைத்தியசாலையில் | தினகரன்

புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துகளினால் 415 பேர் வைத்தியசாலையில்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு பிறப்புடன் இடம்பெற்ற திடீர் விபத்துக்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் 390 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இவ்வாண்டு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (15) 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட விபத்துக்களினால் 415 பேர் வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...