ஆரம்பகால மனிதனின் புது இனம் கண்டுபிடிப்பு | தினகரன்

ஆரம்பகால மனிதனின் புது இனம் கண்டுபிடிப்பு

பிலிப்பைன்ஸின் கல்லோ குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய எலும்புகள் மற்றும் பற்கல் ‘ஹோமோ லுசோனன்சிஸ்’ என்ற மனிதனுடன் தொடர்புபட்ட முன்னர் அறியப்படாத இனம் ஒன்று என்று புதிய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த எச்சங்கள் 50,000 மற்றும் 67,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இரு பெரியவர்கள் மற்றும் ஒரு சிறுவரினதாகும். இதே காலத்தில் நியன்டர்தோல்ஸ், டெனிசோவான்ஸ், ஹோமோ சேப்பியன்ஸ் மற்றும் சிறு உருவ அமைப்புக் கொண்ட ஹோமோ பிளோரன்சியன்சிஸ் ஆகிய இனங்கள் வாழ்ந்துள்ளன.

இந்த புதிய இனம் தற்கால மனிதனின் நேரடி மூதாதை இல்லாதபோதும் தொலைதூர உறவு கொண்டதாகும். எனினும் நேச்சர் சஞ்சிகையில் நேற்று வெளியான இந்த ஆய்வு அறிக்கையின்படி, ஒருகாலத்தில் நம்பப்பட்டதுபோல் மனித பரிணாமம் என்பது ஒரு நேரோட்டமான தன்மை கொண்டதல்ல என்பதற்கான அதரங்கள் அதிகரித்துள்ளன.

தற்கால மனித இனத்தின் வருகையால் ஹோமோ லுசோனன்சிஸ் இனம் அழிந்திருப்பதற்கான சாத்தியத்தை விஞ்ஞானிகள் மறுக்கவில்லை. இந்தோனேசிய தீவு ஒன்றில் 2003 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு இனமான ஹோமோ பிளோரன்சியன்சிஸ் பிராந்தியத்தில் ஹோமோ சேப்பியன்கள் பரவ ஆரம்பித்த சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...