சிரேஷ்ட ஊடகவியலாளர் எப்.எம். பைரூஸ் காலமானார் | தினகரன்


சிரேஷ்ட ஊடகவியலாளர் எப்.எம். பைரூஸ் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் எப்.எம். பைரூஸ் காலமானார்-Senior Journalist FM-Fairooz-Passed-Away

தினகரன் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மூத்த எழுத்தாளருமான அல்ஹாஜ் எப். எம். பைரூஸ் (67) இன்று அதிகாலை (14) காலமானார்.

அவரது ஜனாஸா இல. 35/10A, ஹாஜி பாத்திமா கார்டன், மாக்கொல இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் மாக்கொல இல்லத்திலிருந்து இன்று (14) பிற்பகல் 5.00 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு இன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து (பி.ப. 6.00) குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

கல்முனையைச் சேர்ந்த இஸ்மாயீல் ஆலிம் மீரா உம்மாவின் மருமகனான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான இவர் அதன் செயற்குழு உறுப்பினராக தொடர்ச்சியாக பலவருடங்கள் செயற்பட்டு வந்த அதேசமயம் போரத்தின் பல்வேறு முக்கிய உயர் பதவிகளையூம் வகித்துள்ளார். போரத்தின் பொதுச் செயலாளராக சேவையாற்றி போரத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர்களில் ஒருவராவார திகழ்கின்றார்.

பொது வசதிகள் சபையின் சிரேஷ்ட பொது முகாமையாளராக சேவையாற்றிய இவர். தினபதி, சிந்தாமணி, தினகரன், உதயம், நவமணி உட்பட பல பத்திரிகைகளில் சுதந்திர (Frelance) எழுத்தாளராக சேவையாற்றியவர்.

அத்துடன் மறைந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பற்றிய நினைவு கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சிகளினதும் செய்தி பிரிவுகளில் சேவையாற்றிய இவர், அரச உயர் விருதான கலாபூஷணம் மற்றும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் நடத்தப்பட்ட வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்வில் "ஸவ்த்துல் ஹக்" சத்தியக் குரல் என்ற பட்டங்களை பெற்றுள்ளமை அவரது சேவைக்கு சான்றாகும்.


Add new comment

Or log in with...