சமூகத்தைப் புது வழியில் பயணிக்கச் செய்யும் அரிய சந்தர்ப்பம் | தினகரன்

சமூகத்தைப் புது வழியில் பயணிக்கச் செய்யும் அரிய சந்தர்ப்பம்

சமூகத்தைப் புது வழியில் பயணிக்கச் செய்யும் அரிய சந்தர்ப்பம்-New Year Wish-Prime Minister Ranil Wickremesinghe

இயற்கையின் புது வசந்தம் மூலம் அழகு பெறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சிங்கள, தமிழ் புத்தாண்டு இன, மத பேதமின்றி இலங்கையர் அனைவரும் தமது வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதனூடாக சமூகத்தைப் புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கும் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

புத்தாண்டை மையப்படுத்திய எண்ணக்கருக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கை மற்றும் மனிதனுக்கிடையிலான உறவினைப் புதுப்பித்துக் கொள்வதுடன், மனித சமூகத்தின் முன்பு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற மானிடப் பெறுமானங்களைக் கட்டியெழுப்புவதனை நோக்கமாகக் கொண்டு உருவாகியுள்ளன. 

வடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும், சமூகத்தினதும் மறுமலர்ச்சிக்கான தேசிய கலாசாரத் திருவிழாவாகும். புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவத்கான, வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பதான அபிலாசையுடன் அவற்றைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும்.  இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழுமை மிகுந்த இனிய புத்தாண்டாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்றும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...