உங்கள் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள் | தினகரன்

உங்கள் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்

உங்கள் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்-Mahinda Rajapaksa New Year Wish

சிங்கள, தமிழ் புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான தேசிய திருவிழாக்களில் ஒன்றாகும். அது மட்டுமின்றி உலகெங்கிலும் குடியிருக்கும் அனைத்து இலங்கை சமூக மக்களும் கொண்டாடி வருகின்றனர். இது ஒருவருக்கொருவர் உறவுகளை இணைத்து, பலப்படுத்துவதற்கும், உலகெங்கும் உள்ள வளமான கலாசார பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஷபக்‌ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தாண்டானது புதிய துவக்கத்தை உணர்த்துகிறது. இதுவரையான குறைபாடுகள் மற்றும் பின்னடைவுகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. நாட்டினை முன்னோக்கி நகர்த்துவதற்கு உறுதியளித்திருக்கும் ஒரு புதிய உணர்வு அளிக்கிறது. சிந்தனையிலும் செயலிலும் முற்போக்கு எண்ணத்தை விதைக்கிறது. நட்பு மற்றும் ஒற்றுமையால்  எல்லாத் தீமையையும், பகைமையையும் தவறான எண்ணங்களையும் தூக்கி எறியப்படுகிறது. தேசத்தை முன்னோக்கி நகர்த்துவது நம்பிக்கையே, அது மக்களுக்கு இடையே உறவுப்பலத்தை உருவாக்குகிறது, எந்தவொரு பெரிய பின்னடைவாக இருந்தாலும் உரிய தீர்வை அது எட்டுகிறது.

இந்தப் புத்தாண்டை நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்கையில் உங்களிடம் நான் கேட்பது, வளமான இலங்கைக்கான உங்களின் பங்களிப்பை செலுத்துங்கள் என்பதே. உங்களால் மாற்ற முடிந்தவற்றை கண்டறிந்து, உங்கள் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள். இலங்கையின் செல்வச்செழிப்புக்கான பயணம், தனிமனித கெளரவத்தைப் பாதுகாத்தல் மற்றும் நல்ல எதிர்காலத்தைக் கட்டமைத்தல் உள்ளிட்டவை இந்த அர்ப்பணிப்பில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

செல்வச்செழிப்புக்கான பால் பொங்கும்போதும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாம் ஒற்றுமையாக பங்கேற்கும்போதும், உறவுப் பாலங்களை பலப்படுத்துவோம். இச்சமயத்தில் வளமான மற்றும் வெற்றிகரமான புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க விழைகிறேன். ஒற்றுமையுடன் இந்த புத்தாண்டு விழாவினை கொண்டாடுவீர்கள் எனவும் அஃது ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...