ஆசிய இளைஞர் சதுரங்க போட்டி இலங்கை அணிக்கு 9 பதக்கங்கள் | தினகரன்

ஆசிய இளைஞர் சதுரங்க போட்டி இலங்கை அணிக்கு 9 பதக்கங்கள்

இலங்கையில் நடைபெற்ற ஆசிய இளைஞர் சதுரங்க போட்டியில் வியட்நாம் இளைஞர் சதுரங்க அணி 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் முதலாம் இடத்தை வெற்றி பெற்றதுடன் உஸ்பெகிஸ்தான் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கத்துடன் இரண்டாம் இடத்தையும் இந்தியா 2 தங்கம் 4 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.

ஆசிய மற்றும் சர்வதேச சதுரங்க சம்மேளனத்தின் ஆதரவில் இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் களுத்துறை வஸ்கடுவை 'சிட்ரஸ்' ஹோட்டலில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை நடைபெற்ற இப்போட்டியில் இருபத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த சுமார் 570 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இவ் வைபவத்தின் பிரதம அதிதியாக ஆசிய சதுரங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் Hisham Al Taher, கலந்து கொண்டதுடன் ஆசிய சதுரங்க சம்மேளனத்தின் பிரதி தலைவர் Bharth Singh Chauhan மற்றும் இலங்கை சுற்றுலா துறை அபிவிருத்தி தலைவர் கிசு கோமஸ் (Kishu Gomes) ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் வெற்றி கிண்ணங்களை வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு வழங்கினர்.

இலங்கையின் சார்பில் குருநாகல் மலிதேவ கல்லூரியைச் சேர்ந்த ஜி.எம். ஹர்ஷன திலகரத்ன 16 வயதுக்கு கீழ்ப்பட்ட open blitz பிரிவில் தங்கம் பக்கத்தையும், 18 வயதுக்கு கீழ்ப்பட்ட open standard chess பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர் என்பதும் இலங்கை இப் போட்டியில் ஒன்பதாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

களுத்துறை சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...