சிலாபம் ஆனந்த அணி வெற்றி | தினகரன்

சிலாபம் ஆனந்த அணி வெற்றி

சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை மற்றும் நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற முத்துப் போர் கிரிக்கட் போட்டியில் டக் வேர்த் லுயிஸ் முறை அடிப்படையில் ஆனந்த தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்றுள்ளது. சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி இடம் பெற்றது.

இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோகா பிரியந்த, சிலாபம் நகர சபை தலைவர் குஷான் அபேசேகர ஆகியோர் இந்த கிரிக்கெட் போட்டியில் அதிதிகளாக கலந்து கொண்டனர். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆனந்த பாடசாலை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

48 ஓவர் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களை ஆனந்த கிரிக்கெட் அணி பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்மிஸ்ஸர பாடசாலை அணி 49.5 ஓவர் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மைதானத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலையைத் தொடர்ந்து பொலிஸாரின் உதவியுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒளி நிலை காரணமாக போட்டியை தொடர்ந்து நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது, அதன் பிரகாரம் டக் வேர்த் லுயிஸ் முறை பிரகாரம் இரண்டு புள்ளிகளினால் சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

புத்தளம் தினகரன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...