நோர்வூட் பி.சபை ஐ.தே.க உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை | தினகரன்

நோர்வூட் பி.சபை ஐ.தே.க உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

நோர்வூட் பிரதேச சபையின் விசேடகூட்டத்தில் சபை சட்டத்திட்டத்திற்கு முரணான வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார். சபையின் தலைவரே இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நோர்வூட் பிரதேச சபையின் ஏப்ரல் மாதத்திற்கான விசேட கூட்டம் புலியாத்தை கேட்போர் கூட்டத்தில் சபைத்தலைவர் ரவி குழந்தை வேலு தலைமையில் நேற்று முன்தினம் (11) நடைபெற்றது.

விசேட பிரேரணையொன்றுக்கு அனுமதி பெற்றுக்கொள்ளும் வகையில் இடம்பெற்ற இக் கூட்டத்தின்போது கடந்த மாத சபை அறிக்கை உரிய நேரத்திற்கு கிடைக்க வில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நோர்வூட் வட்டார உறுப்பினர் ஜனனி ஜானகி விஜேவர்தன சபையின் தனது எதிர்பினை முன்வைத்தார்.

இதனால் சபைத் தலைவருக்கும் உறுப்பினர் ஜனனிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சபை தலைவர் அந்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் சபையிலிருந்து அவரை வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த வெளியேற்றப்பட்ட உறுப்பினர் ஜனனி, சபையின் மாதாந்த அறிக்கை மற்றும் கடித்தங்கள் நான்கு நாட்களுக்கு முன்தாக கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் நோர்வூட் சபையில் ஒரு வருடகாலமாகவே உரிய நேரத்தில் கடிதங்கள் கிடைப்பதில்லை.

அத்தோடு எதிர்த்தரப்பான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு சபைத்தலைவர் உரையாற்ற இடமளிப்பதில்லை சர்வதிகாரப் போக்கிலே அவர் சபையை நடத்தி செல்கின்றார். என்னை சபை நடவடிக்கையின் போது வெளியேற்றிமை சட்டத்திற்கு முரனானது எனத் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


Add new comment

Or log in with...