விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் விசேட பூஜை | தினகரன்

விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் விசேட பூஜை

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 19-ந்திகதி வரை படி பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் 10 நாட்கள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உட்பட சிறப்பு நாட்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார்.

ஏப்ரல் 15- ந் திகதி விஷூ பண்டிகையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

தொடர்ந்து பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏப்ரல் 19-ந் திகதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை திறப்பதையொட்டி, சபரிமலை, பம்பை, நிலக்கல், இலவுங்கல் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை மே மாதம் 14- ந் திகதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 19- ந் திகதி வரை 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.


Add new comment

Or log in with...