Home » அம்பாறையில் மக்கள் மன்றங்களை அமைப்பதற்கான ஒன்றுகூடல்

அம்பாறையில் மக்கள் மன்றங்களை அமைப்பதற்கான ஒன்றுகூடல்

by mahesh
January 3, 2024 9:30 am 0 comment

பேண்தகு உட்கட்டமைப்புக்கான அணியும் அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பும் இணைந்து நடத்தும் நீடித்து நிலைத்திருக்கும் நிலையான கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடலும் மக்கள் மன்றங்களை அமைப்பற்கான ஒன்றுகூடலும் இரு தரப்பினர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான கைச்சாத்திடும் நிகழ்வும் கடந்த வியாழக்கிழமை அக்கரைப்பற்று சுவார்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக நல்வாழ்வு அமைப்பின் ஸ்தாபகரும் பிரதம இணைப்பாளருமான எஸ்.செந்தூராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்விமான்கள், ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், இளைஞர் மன்றங்கள் மற்றும் மாதர் அமைப்புகளின் பிரதிகள் போன்றோர் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சகல நிர்மாண கட்டமைப்பு பணிகளும் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களுக்கு சிறந்த வாழ்வை உருவாக்கும் நோக்குடன் வினைத்திறனான சமூக செயற்பாட்டுக் குழுவொன்றை மாவட்ட மட்டத்தில் உருவாக்கி அதனூடாக மகளின் தேவைகள் விருப்புகளை கருத்திற்கொண்டு இந்நிர்மாணப்பணிகளை உறுதி செய்வதற்காகவே இந்தக்குழு அமைக்கப்படுகின்றது.

பேண்தகு உட்கட்டமைப்புக்கான அணியின் பிரதானி சமந்தா அபேவிக்ரவும் சமூக நல்வாழ்வு அமைப்பின் பிரதானி ரீ.கஜயந்தியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். சமூக செயற்பாட்டு குழுவின் தலைவராக தென்கிழக்குக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அட்டாளைச்சேனை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT