அடுத்த மாதம் ஆஸி. பாராளுமன்ற தேர்தல் | தினகரன்

அடுத்த மாதம் ஆஸி. பாராளுமன்ற தேர்தல்

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.

தலைமை ஆளுநரைச் சந்தித்த பின்னர், மொரிசன் தேர்தல் பற்றி அறிவித்தார். பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை அறிவிக்க தலைமை ஆளுநரின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மொரிசனும், எதிர்க் கட்சித் தலைவர் பில் ஷோர்டனும் கடந்த வாரம் தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் ஆரம்பித்தனர். கடந்த வாரமே தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் என்ற ஊகம் நிலவியது.

கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைப் போட்டியில் முன்னாள் பிரதமர் மல்கம் டர்ன்புல்லை வெளியேற்றி கடந்த ஓகஸ்ட் மாதமே மொரிஸன் பிரதமராக பதவியேற்றார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் அவுஸ்திரேலியாவில் பதவி வகிக்கும் ஐந்தாவது பிரதமர் மொரிஸன் ஆவார்.


Add new comment

Or log in with...