ஒரு மில்லியன் காணி உறுதிகள் வழங்கிவைப்பு | தினகரன்

ஒரு மில்லியன் காணி உறுதிகள் வழங்கிவைப்பு

மக்களின் கனவை உணர்ந்து, அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய, கடந்த 3 வருடங்களில் மக்களுக்கு ஒரு மில்லியன் காணி உறுதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் பொலிஸ் நிலையங்கள், ஏனைய அரசாங்க நிறுவனங்கள், பிரதேச செயலகங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் ஆகியவற்றுக்கும் அரசாங்கம் காணிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரவு –செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஹோம் ஸ்வீட் ஹோம் திட்டத்துக்கமைய திருமண ஜோடிகளுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...