அடகு நகைக் கடையில் கொள்ளையிட்டவர் கைது | தினகரன்


அடகு நகைக் கடையில் கொள்ளையிட்டவர் கைது

வவுனியாவில் அடகு நகைக் கடை ஒன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை நேற்று (08) கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட  பணம் மற்றும் தங்க நகைகளைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.   

குறித்த அடகு நகைக் கடையில் கடந்த சில நாட்களிற்கு முன்னர் பணம் மற்றும் நகைகள் ​கொள்ளையிடப்பட்டிருந்தன. 

இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார், குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 673,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் சுமார் 10 இலட்சம் ரூபாவையும் கைப்பற்றியுள்ளனர்.

(கே.வசந்தரூபன் -வவுனியா விசேட நிருபர்)


Add new comment

Or log in with...