Thursday, March 28, 2024
Home » விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எந்தநேரமும் திறக்கப்படலாம்
நோட்டன் பகுதியில் கடும் மழை

விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எந்தநேரமும் திறக்கப்படலாம்

பொறியியலாளர்கள் எச்சரிக்கை

by mahesh
January 3, 2024 6:00 am 0 comment

சீரற்ற காலநிலை காரணமாக நோட்டன் பிரிஜ்ட் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் நீர்த்தேக்கத்துக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்த்தேகத்துக்கு பொறுப்பான பொறியியலாளர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீரேந்தும் பிரதேசங்களுக்கு கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக காசல் ரீ,கெனியோன்,லக்ஸபான நவலக்ஸபான, பொல்பிட்டடிய. மவுசாக்கலை, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் வான்பாயும் அளவினை எட்டியுள்ளன. எனவே எவ்வேளை வான் கதவுகள் தன்னிச்சியாக திறக்கப்படலாம் என்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேநேரம் நீர்த்தேக்கங்களில் நீர் போதியளவில் கிடைக்கப்பெறுவதனால் நீர் மின் உற்பத்தியும் உச்ச அளவில் இடம்பெற்று வருவதாக மின்சார துறை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

(ஹற்றன் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT