Friday, March 29, 2024
Home » யுக்திய தேடுதல்: 0718598800 தொலைபேசி இலக்கம் தொடர்பில் விழிப்புணர்வு

யுக்திய தேடுதல்: 0718598800 தொலைபேசி இலக்கம் தொடர்பில் விழிப்புணர்வு

- அழைப்பவரின் இலக்கத் தகவல்களை அறிய முடியாது

by Rizwan Segu Mohideen
January 2, 2024 6:14 pm 0 comment

– சரியான தகவல்களை வழங்க முச்க்கரவண்டிகளில் ஸ்டிக்கர்

‘யுக்திய’ போதைப்பொருள் சுற்றிவளைப்பு விசேட நடவடிக்கைக்கு தகவல் வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (02) பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

யுக்திய சோதனை நடவடிக்கைக்கு உதவும் வகையில் பொலிஸாருக்கு தகவல்களை வழங்க அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 0718598800 எனும் தொலைபேசி இலக்கம் தொடர்பில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை அமைந்துள்ளது.

அனைத்து பொலிஸ் பிரிவுகளின் பிரஜா பொலிஸ் பிரிவுகளினாலும் இது தொடர்பான ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, குறித்த ஸ்டிக்கர்களை முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பொதுமக்களை சென்றடையும் ஊடகங்களில் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

குறித்த தொலைபேசி இலக்கத்தை அழைக்கும்போது, அதில் அழைப்பவர்களின் தொலைபேசி இலக்கம் தொடர்பான தகவல்கள் வெளிவராத வகையில் இந்த தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சானக அபேசிறி குணவர்தன தெரிவித்தார்.

மக்கள் சரியான தகவல்களை வழங்கும் வகையில் இன்று முதல் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் காணப்படும் முச்சக்கர வண்டிகளிலும் இதனை ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்புக்காக 24 மணி நேர விசேட பிரிவு

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 822 சந்தேகநபர்கள் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT