புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு எட்டு மறைசாட்சிகள் மற்றும் ஆறு இறை ஊழியர்கள் | தினகரன்

புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு எட்டு மறைசாட்சிகள் மற்றும் ஆறு இறை ஊழியர்கள்

புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென புண்ணிய நற்பண்புகளைக் கொண்ட எட்டு மறைசாட்சிகள் மற்றும் ஆறு இறை ஊழியர்களின் வாழ்வு விபரங்களை திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். 

புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தும் பணிகளையாற்றும் திருப்பீட பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து இந்த விபரங்களைச் சமர்ப்பித்தார்.  

அருள்பணியாளர் Alfredo Cremonesi அவர்கள் மியன்மார் நாட்டின் Donoku என்ற கிராமத்தில், 1953ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் திகதி விசுவாசத்திற்காக மறைசாட்சியாக இறந்தார் 

ஸ்பெயின் நாட்டில் 1847ஆம் ஆண்டு பிறந்து, 1940ஆம் ஆண்டில் காலமான வணக்கத்துக்குரிய அருள்சகோதரி Maria Emilia Riquelme y Zayas அவர்களின் பரிந்துரையால் ஒரு புதுமை நடைபெற்றுள்ளது. இவர் திருநற்கருணை மற்றும் அமல மரியின் மறைப்பணியாளர் சபையை ஆரம்பித்தவர். 

1950க்கும் 1970ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இறைஊழியர்களான Valerio Traiano Frenţiu, Vasile Aftenie, Giovanni Suciu, Tito Livio Chinezu, Giovanni Bălan, Alessandro Rusu, Giulio Hossu ஆகிய ஏழு ஆயர்கள் ருமேனியா நாட்டில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள். 

 பாப்பிறை மறை பணிகள் சபையின் இத்தாலிய அருள்பணியாளர் Alfredo Cremonesi அவர்கள் மியன்மார் நாட்டின் Donoku என்ற கிராமத்தில் 1953ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி விசுவாசத்திற்காக மறைசாட்சியாக இறந்தார். இவர் 1902ஆம் ஆண்டு இத்தாலியின் Ripalta Guerinaல் பிறந்தவர். 

திருஇதய கப்புச்சின் அருள்சகோதரிகள் சபையை நிறுவிய இத்தாலிய மறைமாவட்ட அருள்பணியாளர் Francesco Maria Di Francia, புனித பிரான்சிஸ் மூன்றாம் அருள்சகோதரிகள் சபையை நிறுவிய இத்தாலியரான Maria Hueber, நம் வியாகுல அன்னைமரியின் புதல்விகள் சபையை நிறுவிய இத்தாலியரான Maria Teresa Camera, சிறிய ஏழைச் சகோதரிகள் சபையின் துணை நிறுவனரான இத்தாலியரான Maria Teresa Gabrieli, 

மனுஉரு எடுத்த இறைவார்த்தையின் பிரான்சிஸ் மறை பணியாளர் சகோதரிகள் சபையை ஆரம்பித்த இத்தாலியரான Giovanna Francesca dello Spirito Santo (14,செப்.1888 – 21டிச.1984) ஆகிய இறைஊழியர்களின் புண்ணிய நற்புண்புகள் குறித்த விபரங்களையே திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார். (ஸ) 


Add new comment

Or log in with...