Tuesday, April 23, 2024
Home » மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி போக்குவரத்து தடை

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி போக்குவரத்து தடை

by Prashahini
January 2, 2024 12:29 pm 0 comment

பராக்கிரம வாவியின் வான் கதவுகள் கடந்த 29ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் திறக்கப்பட்டது. இதையடுத்து மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டது.

மழை சற்று குறைந்த போதிலும் தலா 2 அடி திறக்கப்பட்ட பராக்கிரம சமுத்திரத்தின் 10 மதகுகள் 1 அடியாக குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வினாடிக்கு 2500 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 1230 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

மன்னம்பிட்டிய வெள்ளநீர் மட்டம் சற்று குறைவடைந்து வருகின்ற போதிலும் போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது..

இதன்படி, வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல புகையிரத நிலையத்தில் இருந்து மனம்பிட்டி நோக்கி விசேட புகையிரத சேவை இடம் பெறுவதாக என கதுருவெல புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

அத்தோடு மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கிரிதலே, எலஹெர, பகமூனை, தெஹிஅத்த கண்டிய வீதி ஊடாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நீர் மட்டம் குறையுமாயின் ஞாயிற்றுக்கிழமை (07) பிற்பகல் அளவில் போக்குவரத்துக்காக பாதை திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT