Home » கிராம மட்டத்தில் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதால் கட்சி வளர்ச்சியடையும்

கிராம மட்டத்தில் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதால் கட்சி வளர்ச்சியடையும்

மு.கா. இன் பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை

by Gayan Abeykoon
January 3, 2024 7:04 am 0 comment

கிராம மட்டத்தில் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதனால் கட்சி வளர்ச்சி அடைவதுடன், நமக்கான அரசியல் பிரதிநிதித்துவங்களும் பாதுகாக்கப்படும் நிலைமை உருவாகும் என முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிராம மட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புக்கள் சீராக்கப்படுவதனால், கட்சி வளர்ச்சி அடைவதுடன் நமக்கான அரசியல் பிரதிநிதித்துவங்களையும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சம்மாந்துறை மல்கம்பிட்டி வட்டாரத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புணரமைக்கும் நிகழ்வில் சம்மாந்துறை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர், “பெரும் தலைவர் அஸ்றப் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு நமது மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து மாவட்ட மக்களுக்கான பணிகளை செய்தார். அம்பாறை மாவட்டம் முழுவதும் ஒரு தொகுதி என்ற அடிப்படையில் செயல்பட்டு வந்தார். பிரதேசவாதத்தை பேசி பிரித்து வைத்த முஸ்லிம்களை தலைவர் அஸ்றப் ஒற்றுமைப்படுத்தினார். நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை கிராம மட்டத்தில் பலப்படுத்தி கட்டமைப்புக்களை சீராக்கி எதிர்காலத்தில் நமக்கான அரசியல் பிரதிநிதித்துவங்களை பெறுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். கடந்த காலங்களில் கட்சிக் கிளைகளின் கட்டமைப்பு சீராக இயங்காத காரணங்களால்தான் சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போன யாதார்த்தையும் இன்று உணர்கின்றோம்.

எனவே கட்சியும் கட்சித் தலைமையும் எந்த எதிர்பாப்புடன் கட்சிக் கிளைகளின் புணரமைப்பின் ஊடாக எதிர்பார்கின்றதோ அதனை கிராம மட்ட செயற்பாட்டாளர்கள் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT