தெற்காசியாவின் அதியுயர் வான் மேம்பாலம் கொழும்பில் | தினகரன்

தெற்காசியாவின் அதியுயர் வான் மேம்பாலம் கொழும்பில்

கொழும்பு 2பேர வாவி முகப்பில் சன்கென் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அதன் பிரதான குடியிருப்பு செயற்திட்டமான கப்பிட்டொல் டுவின் பீக்ஸ் தெற்காசியாவிலேயே அதியுயர் வான் மேம்பாலத்தை நிர்மாணித்து மற்றுமொரு சாதனையை அண்மையில் நிலைநாட்டியுள்ளது. 

சமார் 25பில்லியன் ரூபா பெறுமதியான குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டத்தின் பொறியியல் கட்டுமானத்தில் இது குறிப்பிடத்தக்க, வானளாவிய உயரத்தில் அமைந்துள்ள 30அடி மேம்பாலமானது அந்த நிர்மாணச் செயற்திட்டத்தின் கீழ் ஒன்றுக்கொன்று அருகில் அமைந்துள்ள 50அடுக்கு கொண்ட வானளாவிய இரட்டைக் கோபுரங்களை இணைக்கின்றது.

நகரமைப்பு, பேர வாவி, இந்து சமுத்திரம் மற்றும் தாமரைக் கோபுரம் ஆகிய கண்கவர் தோற்றங்களை எதிர்கொண்டவாறு மிகவும் பிரலமான பேர வாவியின் முகப்பில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சொகுசு அடுக்குமனையின் பெருமை மிக்க உரிமையாளர்களாக மாறவுள்ளதால், கப்பிட்டொல் டுவின் பீக்ஸ் குடியிருப்பாளர்களின் வாழ்வும் பாரிய அளவில் மாற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

தரை மட்டத்திலிருந்து 173.75 மீட்டர் (570 அடி) உயரத்தில் வான் மேம்பாலம் அமைந்துள்ளது. இச்செயற்திட்டத்தின் கட்டடக்கலை அதிசயங்களில் ஒன்றாக, 50 ஆவது தளத்தில் இரு கோபுரங்களையும் இணைப்பதுடன், குடியிருப்பாளர்களுக்கு பிரத்தியேகமான வசதிகள் சிலவற்றை வழங்குகின்றது. கொழும்பு நகரின் மையப்பகுதியில் நவீன வாழ்வின் கூடுதல் சௌகரியம் மற்றும் வசதிகளை இச்செயற்திட்டம் வழங்குவதுடன், குடியிருப்பாளர்களுக்கு பிரத்தியேகமாக 24 மணி நேர வாயிற்காப்போன் சேவைகள், வர்த்தக மையம், உள்வாரி சலவைத் தெரிவு, மினி அங்காடி, மருந்தகம், நீராவிக் குளியல் அறை, சலூன் மற்றும் ஸ்பா, அதிநவீன உடற்பயிற்சிக்கூடம், விளக்குப் பாலம் மற்றும் விளக்குத் திடல், விளையாட்டு அறை, வெளிப்புற யோகா கூடம், உட்புற நடன ஸ்டூடியோ, நூலக ஓய்வறை, தியான தோட்டம், நீச்சல் தடாகம், மேல்தட்டு ஓய்வகம், சூரியாஸ்தமன மதுசாலை மற்றும் உணவகம், பார்பிகியூ உணவு தயாரிக்கும் இடம் மற்றும் மேல்தட்டு சிற்றுண்டியகம் ஆகிய வசதிகள் அனைத்தையும் வழங்குகின்றது.


Add new comment

Or log in with...