2018 இல் 2.37 பி. அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் உள்வருகை | தினகரன்

2018 இல் 2.37 பி. அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் உள்வருகை

2018ஆம் ஆண்டில் அரசாங்கம் 2.37 பில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடி வெளிநாட்டு முதலீடாக நாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இவ்வருடத்தில் மாத்திரம் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான முதலீடு ஹாம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படவிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். 

2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 25 வீதத்தினால் அதிகரித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

முதலீடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் சுட்டிக்காட்டுகையில், இலங்கைக்கு எப்போதுமில்லாதவாறு மிகவும் அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 2.37பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியமை 2018 ஆம் ஆண்டில் பதிவாகியது. இது 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொள்ளப்பட்ட 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீட்டுடன் ஒப்பிடும்போது 25% அதிகரிப்பாகும். துறைசார் பங்களிப்புக்களின் பிரகாரம், 75% உட்கட்டமைப்புக்காகவும், 13% உற்பத்திக்காகவும் மற்றும் 12% சேவைக்காவும் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக உள்ளடக்கப்பட்டன. 

விசேடமாக ஏற்றுமதியை மைய்யப்படுத்திய கருத்திட்டங்களையுடைய உற்பத்திகள் மற்றும் சேவைகளிலிருந்து வரும் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தற்பொழுது அதிக கவனத்தை செலுத்திவருகின்றோம்.

இவ்வருடம், முன்மொழியப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் ஏற்றுமதியை மைய்யப்படுத்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிப்பதற்காகவும், மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இரும்பு உற்பத்திகள் தொழிற்சாலையை நிர்மாணிப்பதத்திற்காவும் முதலீட்டு சபை ஏற்கனவே அனுமதியை வழங்கியுள்ளது. சுத்திகரிப்பு ஆலை 24 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் திருகோணமலையில் அமையவுள்ள இரும்புத்தொழிற்சாலை இவ்வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் ஆரம்பித்துவைக்கப்படவிருக்கின்றது.  

அண்ணளவாக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 128 கருத்திட்டங்களுக்கு முதலீட்டு சபை 2018 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. பயனீட்டுத் துறைகளுக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலரும், உட்கட்டமைப்புக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரும், உற்பத்திசெய்தலும் சேவைகளுக்கும் 800 மில்லியன் அமெரிக்க டொலரும் பயன்படுத்தப்படவுள்ளன. 

2019 ஆம் ஆண்டில் இதுவரைக்கும், ஏற்றுமதியை மைய்யப்படுத்திய சுத்திகரிப்பு ஆலை மற்றும் இரும்புத் தொழிற்சாலை ஆகியவற்றை உள்ளடக்கிய அண்ணளவாக 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய 24 கருத்திட்டங்களுக்கான அனுமதியை முதலீட்டு சபை வழங்கியிருக்கின்றது. 

இவை கடனற்ற முதலீட்டு உட்பாய்ச்சலுக்கான பிரதான மூலமாகவுள்ளதால் எல்லா வடிவங்களிலுமுள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் முக்கியமானவையாகும். துணைக் கொள்கைகள் மற்றும் உபாயங்கள், நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் வலுப்படுத்தும் உட்கட்டமைப்புகள் ஆகியவற்றை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் இலங்கையின் உள்நாட்டு தொழில் முயற்சிகளின் போட்டித்தன்மையை அதிகரிக்கக்கூடிய பல முன்னெடுப்புகளை, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு நடைமுறைப்படுத்திவருகின்றது.  

வெற்றிகரமாக மேற்கொண்டு வந்திருக்கும் அதேபோல் மேற்கொண்டுவரும் பல முன்னெடுப்புகள் இலங்கையில் இரண்டு தசாப்தகாலமாக பிற்போடப்பட்ட விடயங்களாகவுள்ளதுடன் அவை மிகவும் நிலைபேறானதும் போட்டிமிக்கதுமான வளர்ச்சிப்பாதையில் தம்மை நிலை நிறுத்துவதத்திற்கு அவை விரைவாக கோரப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.        


Add new comment

Or log in with...