பிலியந்தலையில் 710 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது | தினகரன்


பிலியந்தலையில் 710 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

பிலியந்தலை பகுதியில் 710 கிராம் ஹெரோயினுடன் இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். அதேவேளை போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  இச்சம்பவம் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்கிசை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் பிலியந்தலை தம்பே கரதியான சந்தியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியை தடுத்து நிறுத்தி சோதனைக்குட்படுத்தியபோது அதன் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து அந்நபர் வழங்கிய வாக்குமூலத்துக்கமைய பட்டகெதர பிரதேசத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர். இந்நபரிடமிருந்து மொத்தமாக 710  கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களான இரத்மலானை பகுதியைச் சேர்ந்த தரிந்து வாசனா த சில்வா(28) மற்றும் தனுக்க சாமர (24) ஆகியோரே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

(லக்ஷ்மி பரசுராமன்)


Add new comment

Or log in with...