வித்தியாசமான யுக்திகளை கையாளும் நாடுகள் | தினகரன்


வித்தியாசமான யுக்திகளை கையாளும் நாடுகள்

ஒவ்வொரு நாடும் சுற்றுலாப் பயணிகளைக் கவர ஏதோவொரு யுக்தியை கையாண்டு வருகின்றது. எல்லோரும் பயன்படுத்தும் சில விடயங்கள் எங்கோ ஒரு இடத்தில் தோன்றியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் வித்தியாசமானதும், மக்களை  கவரக்கூடியதுமான சில யுக்திகள் தொடர்பில் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

பின்லாந்து -பஸ்ஸை விட்டு இறங்கும்போது பஸ் சாரதிக்கு நன்றி தெரிவிக்க பொத்தான்

ஜேர்மனி -இது பழங்காலக் கதவாகும். சாவித் துவாரத்தை இருட்டிலும் கண்டுபிடிக்கும் வகையில் இக்கதவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா -ஒலிம்பிக் போட்டியில் உள்ளூர்வாசி ஒருவர் தங்கப்பதக்கம் வென்றதால், இந்த அஞ்சல் பெட்டிக்கு தங்க வர்ணம் பூசப்பட்டுள்ளது.

தென்கொரியா -இட வசதியை மிதப்படுத்துவதற்காக இவ்வாறான வாகனத் தரிப்பு முறை

இத்தாலி –குறுகிய தெருக்களில், இடங்களில் பொதிகளை விநியோகிப்பதற்காக இந்த முச்சில்லு சைக்கிள் பயன்படுத்தப்படுகின்றது.

ஜப்பான் - படிக்கட்டு வழியாக பொருட்களை இலகுவாகக் கொண்டுசெல்ல இந்த வண்டி பயன்படுத்தப்படுகின்றது.

சுவீடன் - வைபை வசதியுடன் குப்பைத் தொட்டி இது. பொதுமக்கள் தங்கள் குப்பைகளைத் தொலைவில் வீசுவதற்காக மக்களை ஊக்குவிக்கின்றன.

தென்கொரியா – சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு உணவுகளை உட்கொள்ள புதிய வடிவிலான கையுறை.

டென்மார்க் -பயண வழிகாட்டியாக இவர். 

சுவிற்ஸர்லாந்து –-பெண்களுக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம்.

அமெரிக்கா –சைக்கிள்களுக்கான நிறுத்தம்.

சீனா –சுத்தமான காற்றை சுவாசிக்கும் வகையில் காரில் மரக்கன்று.

கனடா –இப்பூங்காவில் சைக்கிள் பழுது பார்க்கும் இடம்.

பெல்ஜியம் -நடை பாதைகளில் பூசப்படும் வர்ணத்துக்கு பதிலாக மாபிள் கற்கள்.

என்ன நினைக்கின்றீர்கள்?


Add new comment

Or log in with...