நாளை முதல் ஏப்ரல் 15 வரை சூரியன் உச்சத்தில் | தினகரன்


நாளை முதல் ஏப்ரல் 15 வரை சூரியன் உச்சத்தில்

நாளை முதல் ஏப்ரல் 15 வரை சூரியன் உச்சத்தில்-Sun Over Head From Apr 05 - 15 in Sri Lanka

நாளை (05) முதல் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதால், இக்காலப்பகுதயில் பகல் மற்றும் இரவுவேளைகளில் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, திக்வெல்ல, கெக்கணதுர, கொட்டவில மற்றும் மிதிகம ஆகிய பிரதேசங்களில் பிற்பகல் 12.12 மணிக்கு சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

வட மேல் மாகாணம் மற்றும் அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை சுட்டி அதிகரிக்கும் எனவும் இதனால் உடல் வெப்பநிலை பாரிய அளவில் அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்காலப்பகுதியில் தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...