நாட்டின் 60% பெரும்பான்மை ஐ.தே.கட்சிக்கே உள்ளது | தினகரன்

நாட்டின் 60% பெரும்பான்மை ஐ.தே.கட்சிக்கே உள்ளது

ஜனாதிபதி தேர்தலில்  அமோக வெற்றி உறுத​ே

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியீட்டுமென ஐ.தே.க செயலாளர் நாயகமும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார். 

"நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளை மீள ஆராயும்போது 60சதவீதமானோர் பொதுஜன பெரமுனவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். இந்த பெரும்பான்மை 60சதவீதம் தற்போது ஐ.தே.க வுடனேயே உள்ளது. எனவே ஐ.தே.க வெற்றியீட்டுவதில் சந்தேகம் இல்லை," என்றும் அமைச்சர் கூறினார். 

கடந்த 52 நாட்களுடன் பொதுஜன பெரமுன கட்சியின் செல்வாக்கு நாட்டு மக்களிடையே நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அனேகமான உள்ளூராட்சி மன்றங்கள் பொதுஜன பெரமுனவுக்குரியவை. பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியொதுக்கீட்டை பாராளுமன்றத்தில் தோற்கடித்ததன் மூலம் அது பொதுஜன பெரமுன கட்சிக்கே திருப்பி வந்துள்ளது.    


Add new comment

Or log in with...