நாம் இறைவனுக்கு நிரந்தர சொந்தமானவர்கள்! | தினகரன்

நாம் இறைவனுக்கு நிரந்தர சொந்தமானவர்கள்!

லூக்கா நற்செய்தி பதினைந்தாம் அதிகாரத்தில் காணாமல் போன விடயங்களை இயேசு உவமைகளாக எடுத்துரைத்துள்ளார். முதலாவதாக காணாமல் போன ஆடு பற்றிய உவமை.  

இதில் ஆடு வழிதவறிச் சென்று விடுகின்றது. வளர்ப்புப் பிராணிகளில் ஆடு மந்த புத்தியுள்ளது. தன் ஆயன் காட்டும் வழியில் செல்லும்போது அதற்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.  

தன் ஆட்டின் தன்மை அறிந்த ஆயன் அதற்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவான். ஆபத்துக்கள் ஏற்படும்போது ஆயன் தன் உயிரைப் பணயம் வைத்து அதனைக் காப்பாற்றுவான். அதனை புல்லுள்ள இடங்களில் மேய்ப்பதற்காக அழைத்துச் செல்வான்.  

அதற்குக் குறையொன்றும் இராதபடி கவனித்துக் கொள்வான். தான் அரசனாகும் முன் ஆடு மேய்த்ததை நினைவில் கொண்டே தாவீது தனது 23ம் திருப்பாடலை இயற்றியுள்ளார். இப்போதாவது ஒரு ஆடு வழிதவறிச் சென்றுவிட்டால் அதன் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.  

ஒரு நாளின் இறுதியில் மேய்ப்பன் தன் ஆடுகளை எண்ணிப் பார்க்கும் போது அதில் ஒன்று குறைவாக இருப்பதைக் கவனிப்பான். தமது உவமையில் அந்த மேய்ப்பன் காணாமல் போன ஆட்டைத் தேடி முயற்சியெடுத்ததன் பின் கண்டுபிடிப்பான். அப்போது அவனுக்கேற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.  

அதுபோலவே ஒரு பெண் தன் காசைத் தொலைத்துவிடுவாள். பிறகு விளக்கை ஏற்றி அதனைத் தேடி எடுப்பாள். அப்போது அவளது மகிழ்ச்சி பெரிதானதாக இருக்கும். இவ்விரண்டு உவமைகளிலும் காணாமல் போன பொருள் தானாகவே திரும்பி வந்திடவில்லை. இரண்டுமே அதன் உரிமையாளர் மிக முயற்சியெடுத்துத் தேடிய பின்னரே கிடைக்கின்றது.  

ஆனால் இறுதியாக வரும் உவமையில் காணாமற் போன மகன் திரும்பி வருவது அவனது சொந்த முயற்சியாலேயே இங்கே அவனது தந்தை அவனைத் தேடிப் போகவில்லை. அவன் காணாமல் போனதும் அதுபோல் அவன் திரும்பி வருவதும் சொந்த முடிவினாலேயே. அவன் விலகிப் போகும்போது அவன் தந்தை அவனை பலவந்தமாக தடுத்து நிறுத்தவில்லை. அநேகமாக அவன் எங்கு சுற்றினாலும் தன்னிடமே மீண்டும் அவன் திரும்பி வருவான் என்று அவர் எதிர்பார்த்திருக்கக் கூடும்.  

இவ்வுவமையை “ஊதாரி மகனின் உவமை” என அழைப்பர். ஆனால் உண்மையில் இது ஊதாரித்தனமாக அன்பு செய்யும் ஒரு தந்தையின் கதையே என்றே அழைக்க வேண்டும். குற்றமே செய்யாத அவரது மூத்த மகனை விட குற்றங்கள் பல செய்த இளைய மகனையே அவர் அதிகமாக நேசித்தாரே என எண்ணத் தோன்றுகின்றது.  

தன் மகன் என்ன செய்யப் போகிறான். என்பதையும் கடைசியில் அவன் மனம் திரும்பி தன்னிடமே வருவான் என முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தார்.  

ஒரு பொருள் கைநழுவிப் போகும் போது இழந்தவரிடம் ஓர் அச்சம் இருக்கும். இது நம்மிடம் திரும்பி வருமா என அவர் சந்தேகப்படுவார். ஆனால் ஒரு பொருள் தொலைந்த பின்னரும் அது தம்மிடமே திரும்பி வரும்போதுதான் அது உண்மையிலேயே தமது பொருள் என்பது உறுதியாகின்றது. தொலைந்து போன காகம், ஆடும், மகனும் உண்மையிலேயே அதன் உரிமையாளருக்கே சொந்தமானவை. அதனால்தான் அவை அவரிடம் திரும்பி வருகின்றன.  

அப்படி திரும்பி வராதிருந்தால் அது அவர்களுக்கு சொந்தமானவை அல்ல. தற்காலிகமாக அல்லது எக்காலத்திற்கும் சொந்தமானவர்களா?  

காணாமற்போன மகனின் கதை நற்செய்தியில் இப்படி காணப்படுகிறது.  

அக்காலத்தில் வரி தண்டுவோர் பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கினார்கள். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரலாற்று அவர்களோடு உணவருந்திகிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்.  

“ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, “அப்பா சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்” என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாட்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார். அங்கு தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினான். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.  

அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுக்களால் தம் பயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக் கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு இழந்தவராய் என் தந்தையின் கூலியாட்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க நான் இங்கு பசியால் சாகிறேன். நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன். உம்முடைய கூலியாட்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளுங்கள். என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் தந்தை அவரைக் கண்டு பரிவு கொண்டு அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்” என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான். மீண்டும் கிடைத்துள்ளான். என்றார்.  

மூத்த மகன் சினமுற்று உள்ளே போக விரும்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், “பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமை போன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும் என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.  

ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்து விட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, "இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! "என்றார். அதற்கு தந்தை "மகனே நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய் என்னுடையதெல்லாம் உன்னுடையதே" இப்போது நாம் மகிழந்து கொண்டாடி இன்புற வேண்டும்.

ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிர் பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான் மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.                     (ஸ)  

(லோரன்ஸ் செல்வா)


Add new comment

Or log in with...