Thursday, April 18, 2024
Home » புதிய அணித் தலைவர்களுடன் இலங்கை ஒருநாள், டி20 உத்தேச அணிகள் அறிவிப்பு

புதிய அணித் தலைவர்களுடன் இலங்கை ஒருநாள், டி20 உத்தேச அணிகள் அறிவிப்பு

by damith
January 1, 2024 6:06 am 0 comment

சிம்பாப்வேயுக்கு எதிரான எதிர்வரும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான உத்தேச இலங்கை குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதில் சிம்பாப்வேயுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடருக்கான உத்தேச அணியில் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸ், பானுக்க ராஜபக்ஷ மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடுவதற்கான சிம்பாப்வே அணி எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. இதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 22 பேர் கொண்ட டி20 உத்தேச அணி மற்றும் ஒருநாள் அணியில் இருந்து இறுதி அணி தேர்வு செய்யப்பட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது.

டி20 அணிக்கு வனிந்து ஹசரங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடைசியாக 2021 ஆம் ஆண்டிலேயே இலங்கை டி20 அணியில் மத்தியூஸ் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அறிவிக்கப்பட்டிருக்கும் 21 பேர் கொண்ட உத்தேச ஒருநாள் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டிருப்பதோடு அந்த அணிக்கும் சரித் அசலங்க உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஒருநாள் உத்தேச குழாம்: குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானக்க, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, டில்சான் மதுஷங்க, துஷ்மன்த சமீர, துனித் வெள்ளாலகே, பிரமோத் மதுசான், அசித பெர்னாண்டோ, அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்செய், சாமிக்க குணசேகர.

இலங்கை டி20 உத்தேச குழாம்: வனிந்து ஹஸரங்க (தலைவர்), சரித் அசலன்க (உப தலைவர்), குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, தசுன் ஷானக்க, அஞ்சலோ மத்தியூஸ், பானுக்க ராஜபக்ஷ, குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, டில்சான் மதுஷங்க, துஷ்மன்த சமீர, துனித் வெள்ளாலகே, பிரமோத் மதுசான், அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்செய், மதீஷ பதிரண, நுவன் துஷார, பினுர பெர்னாண்டோ.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT