சீனி கொள்கலனில் 218 கிலோ கொக்கைன், மூவர் கைது | தினகரன்

சீனி கொள்கலனில் 218 கிலோ கொக்கைன், மூவர் கைது

(வைப்பக படம்)
 
சீனி கொள்கலன் ஒன்றிலிருந்து கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
நேற்று (19) பிற்பகல், பொலிசாருக்கு கிடைத்த இரகிசய தகவல் ஒன்றின் அடிப்படையில், இரத்மலானை பிரதேசத்தில் வைத்து குறித்த கொள்கலன் சோதனையிடப்பட்ட போது, அதிலிருந்து கொக்கேன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பில் குறித்த கொள்கலனை கைப்பற்றியுள்ளதாகவும், குறித்த கொக்கேன் போதைப்பொருளின் எடை 218.6 கிலோ கிராம் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், பொலிசார் தெரிவித்தனர்.
 
இவ்விடயம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக மத்திய நிலையம், குறித்த நபர்களை இன்றைய தினம் (20) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, கல்கிஸ்ஸை பொலிஸ் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆகியன மேற்கொண்டுள்ளது.
 

Add new comment

Or log in with...