புளியங்குளத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது | தினகரன்

புளியங்குளத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஒன்பது கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவரை, வவுனியா, புளியங்குளம் பகுதியில்  நேற்றிரவு (15) பொலிஸார் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

புளியங்குளம் நகரில் பொலிஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோதே, இச்சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்து சோதனையிட்டபோது, 9கிலோகிராம் கேரளா கஞ்சாவை இச்சந்தேக நபர் தனது பயணப்பொதியில் மறைத்து வைத்திருந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, இச்சந்தேக நபரைக் கைதுசெய்து விசாரித்தபோது அவர் ஜா–எல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

(கோவில்குளம் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...