மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது | தினகரன்

மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது

ஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதையொழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இதற்கமைய மாவட்ட மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள்  மேற்கொண்ட திடீர்  சுற்றிவளைப்பின்போது 75000மில்லி லீற்றர் கோடா 12000மில்லி லீற்றர் சட்டவிரோத பியர் 9845மில்லிலீற்றர் சட்டவிரோத சாராயம் 600மில்லி லீற்றர்  கசிப்பு உட்பட பெருமளவு கசிப்பு உற்பத்தி செய்யப்படும் உபகரணங்களுடன்  ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தயாளேஸ்ரகுமார் தெரிவித்தார். 

மாவடிவேம்பு மற்றும் அரசடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

(மட்டக்களப்பு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...