போயா தினத்தில் மான் வேட்டையாடிய மூவர் கைது

போயா தினங்களில் மான்களைச் சுட்டு வேட்டையாடி ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யும் மூவர் அடங்கிய கோஷ்டியினரை  ஹல்துமுள்ளை வனஜீவராசிகள் திணைக்கள சுற்றிவளைப்புக் குழுவினர் நேற்று (19-)  காலையில் கைதுசெய்துள்ளனர். 

மேற்படி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே, சுற்றிவளைப்புக் குழுவினர் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிவளைத்து 300  கிலோ  மான் இறைச்சியுடன்  மூவரைக் கைதுசெய்துள்ளனர்.  

கைதுசெய்யப்பட்டவர்கள், பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் நேற்று  ஆஜர்செய்யப்பட்டதும், நீதிபதி எதிர்வரும் 22ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பதுளை தினகரன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...