ஆரையம்பதியில் குடும்பஸ்தர் கொலை; அயல்வீட்டுக்காரர் கைது | தினகரன்


ஆரையம்பதியில் குடும்பஸ்தர் கொலை; அயல்வீட்டுக்காரர் கைது

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை; சந்தேகநபர் கைது-Family men Killed-Batticaloa Arayampathy

ஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் சம்பவம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான கூலித்தொழில் செய்யும் மா. லெட்சுமணன் (43) என்பவரே கொலை செய்யப்பட்டவர் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை (16) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அயல் வீட்டுக்காரனுக்கும் கொல்லப்பட்டவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் மரம் சீவும் கூரிய ஆயுதத்தினால் சந்தேகநபர் குறித்த நபரை தாக்கியுள்ளார். பலத்த காயத்துக்குள்ளான லெட்சுமணன் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்

சந்தேகநபரை கைது செய்துள்ள காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 


Add new comment

Or log in with...