Friday, March 29, 2024
Home » பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

by damith
January 1, 2024 10:14 am 0 comment

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த 30 ஆம் திகதி பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூபா 1,200 முதல் ரூபா 1,600 வரை மொத்த விற்பனைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அதன் சில்லறை விலை ரூபா 1,800 ரூபா முதல் 2,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு 100 கிராம் பச்சை மிளகாய் ரூபா 200 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அந்த வகையில் ஒரு மிளகாய் ரூபா 15 இற்கும் 20 ரூபாவிற்கும் இடையில் அமைகின்றது.

அத்தோடு பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் ரூபா 700 இற்கு விற்கப்படுகின்றது.

தக்காளி ஒரு கிலோ கிராம் ரூபா 600 முதல் ரூபா 800 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

அன் வகையில் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வெகுவாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

(கல்நேவ தினகரன் விசேட நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT