மஸ்தான் எம்.பி. பயணித்த வாகனம் விபத்து; ஒருவர் காயம் | தினகரன்

மஸ்தான் எம்.பி. பயணித்த வாகனம் விபத்து; ஒருவர் காயம்

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில் பெண்ணொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு மதவாச்சி, பூனாவ பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, கொழும்பிலிருந்து வவுனியாவிற்குப் பயணித்துக்கொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான காதர் மஸ்தான் சென்ற கெப் ரக வாகனம். பூனாவ பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.இதன் போது உள் வீதியிலிருந்து ஏ-9வீதிக்குத் திரும்பிய குறித்த மோட்டார் சைக்கிள், கெப் வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூவர் பயணித்த நிலையில், மனைவி காயமடைந்துள்ளார்.

இதேவேளை, குறித்த வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், அவரது பாதுகாப்பு உதவியாளர், ஊடகப்பிரிவு உத்தியோகத்தர் ஆகியோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)


Add new comment

Or log in with...