யுத்தத்தால் இழந்த சொத்துக்களை மீளப்பெற சட்டத்தில் திருத்தம் | தினகரன்


யுத்தத்தால் இழந்த சொத்துக்களை மீளப்பெற சட்டத்தில் திருத்தம்

நாட்டில் நிலவிய  அசாதாரண சூழ்நிலையில்  காணி உள்ளிட்ட பிரத்தியேக சொத்துக்களை இழந்து அதை நீதிமன்றத்தினூடாக  மீளப்பெற்றுக் கொள்ளும் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியாமல்போன நபர்களுக்கு உடனடி வசதிகளை செய்யும் நோக்கில் 2016ஆம் ஆண்டு இல 5இன் கீழான நிவாரண காலம் (விஷேட ஒழுங்கு விதிகள் ) சட்டம் பலப்படுத்தப்படவுள்ளது.

நிவாரணகால சட்டத்தின் மூலம் பயனடையாத நபர்கள் கால எல்லை கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு உட்படுத்தப்படுவர். இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நாளில் இருந்து 2 வருட காலத்துக்குள் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

வழக்கை தாக்கல் செய்வதற்காக மோதல் நிலவிய காலப்பகுதியில் காணாமல் போன ஆவணங்களை மீளத் தயாரிப்பதற்கு அல்லது காணிகளின் உரிமை தொடர்பில் சம்பந்தப் பட்ட சாட்சியங்களை திரட்டுவதற்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெளிவுப்படுத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தை மேலும் 3 வருடங்களுக்கு நீடிப்பதற்காக கால அவகாசம் (விஷேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தை மீள அமுல்படுத்த சட்ட திருத்தத்தை மேற்கொள்ள நீதிமன்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 


Add new comment

Or log in with...