ஹொங்கொங்கில் சிக்கிய சவூதி பெண்கள் விடுதலை | தினகரன்

ஹொங்கொங்கில் சிக்கிய சவூதி பெண்கள் விடுதலை

ஹொங்கொங்கில் சிக்கிக்கொண்ட இரு சவூதி அரேபிய சகோதரிகள் மனிதாபிமான அடிப்படையில் விசா பெற்று வேறு நாட்டை அடைந்துவிட்டனர் என்று அவர்களுடைய சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

18, 20 வயதாகும் அந்தச் சகோதரிகள் குடும்பத்தாரின் துன்புறுத்தலிலிருந்து தப்பிக்க அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது அவர்கள் அவுஸ்திரேலியாவிற்குத் தப்ப முயன்றனர். ஆனால் ஹொங்கொங் விமான நிலையத்தில் பெண்கள் சவூதி அதிகாரிகளிடம் பிடிபட்டனர். அவர்களுடைய கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாக ஹொங்கொங்கில் சிக்கிக்கொண்ட சகோதரிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அவசர விசா வழங்கப்பட்டுள்ளது.

சகோதரிகளின் பாதுகாப்பை முன்னிட்டு அவர்கள் அடைக்கலம் பெற்றுள்ள நாட்டின் விபரம் வெளியிடப்படவில்லை.

ஆனால் விசா கிடைத்த மகிழ்ச்சியில் சகோதரிகள் துள்ளிக் குதிக்கும் வீடியோவை அந்த நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.


Add new comment

Or log in with...