உலகின் சிறந்த ஆசிரியராக கென்ய ஆசிரியருக்கு விருது | தினகரன்

உலகின் சிறந்த ஆசிரியராக கென்ய ஆசிரியருக்கு விருது

தனது சம்பளத்தின் பெரும் பகுதியை வறிய மாணவர்களுக்காக வாழங்கும் கென்யாவின் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உலகின் மிகச் சிறந்த ஆசிரியராக 1 மில்லியல் டொலர் பரிசை வென்றுள்ளார்.

பிரான்சிஸ்கான் மத அமைப்பைச் சேர்ந்த பீட்டர் டபிச்சி என்ற ஆசிரியரே இந்த ஆண்டின் உலக ஆசிரியர் விருதை வென்றுள்ளார்.

அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறைகளில் ஒருசில பாடப் புத்தகங்களுடன் மோசமான நிலையில் உள்ள பாடசாலையில் கற்பித்து வருவதற்காக சகோதரர் பீட்டர் பாராட்டுக்கு உள்ளானார். ப்வானி கிராமத்தின் இரண்டாம் நிலை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் இந்த ஆசிரியர் தமது சம்பளத்தில் 80 வீதத்தை மாணவர்களுக்காக செலவிடுகிறார்.

டுபாயில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த விருது அறிவிக்கப்பட்டது.

வார்க்கி அறக்கட்டளையால் வழங்கப்படும் இந்த விருதை 179 நாடுகளின் 10,000 போட்டியாளர்களை பின்தள்ளி அந்த ஆசிரியர் வென்றுள்ளார்.


Add new comment

Or log in with...