மலையகத்தில் கடும் வரட்சி; குடிநீருக்கு பெருந் தட்டுப்பாடு | தினகரன்

மலையகத்தில் கடும் வரட்சி; குடிநீருக்கு பெருந் தட்டுப்பாடு

மத்திய மலைநாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வரட்சி நிலவி வருவதால் நீரோடைகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் அனைத்தும் வற்றிபோய் உள்ளன.

இந்நிலையில், மவுசாகலை, காசல்ரீ, கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது.

 மேல்கொத்மலை நீர்தேக்கம்

மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டமானது 66அடியாகவும் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர்மட்டம் 48அடியாலும் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 34அடியாலும் குறைவடைந்துள்ளதாகவும் இதனால், மின் உற்பத்திசெய்யும் அளவு குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. கொத்மலைநீர்த்தேக்கங்களில் காணப்படும் தெய்வ உருவச்சிலைகளும் வெளியில் தென்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

காசல்ரீ நீர்தேக்கம்

என்றும் இல்லாதவாறு கடும் வரட்சி நிலவுவதால் மேலும் நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதுடன் வரட்சியான காலநிலை இன்னும் தொடரும்நிலமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரித்த வெப்பநிலையால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பெரும்பாலான இடங்களில் குடிப்பதற்கு போதியளவுநீர் இல்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவ்வப்போதான காலநிலை மாற்றத்தினால் உடல் நலக் குறைபாடுகளாலும் மக்கள் பாதிக்கபடுகின்றனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம். கிருஸ்ணா)


Add new comment

Or log in with...