க.பொ.த சாதாரண தர பெறுபேறு மார்ச் 28 இல் வௌியாகும் | தினகரன்

க.பொ.த சாதாரண தர பெறுபேறு மார்ச் 28 இல் வௌியாகும்

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு நாளை மறுதினம் (28) வெளியாகுமென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில், 656,641 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.

இவர்களில் 422,850 பாடசாலை மாணவர்களும் 233,791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியுள்ளனர். இப்பரீட்சார்த்திகளுக்காக 4,661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.


Add new comment

Or log in with...