மேலும் 27 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை | தினகரன்

மேலும் 27 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

புற்றுநோயாளர் ஒருவருக்கு ரூ. 4 ½கோடி செலவில் சிகிச்சை

மேலும் 27 மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்களின் விலையை குறைக்கும் மூன்றாவது கட்டமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் (ஒசுசல) 42 ஆவது கிளை திறப்பு விழா நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், ரூபா 1.5 மில்லியனாக இருந்த புற்றுநோயாளி ஒருவருக்கு அரசாங்கம் செலவிடும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று புற்றுநோயாளர்கள் 45 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்வதாக சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...