ஊடகவியலாளருக்கு இலகு கடன் திட்டம் | தினகரன்

ஊடகவியலாளருக்கு இலகு கடன் திட்டம்

ஊடகவியலாளர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான இலகு கடன் திட்டத்தை வழங்க ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  

இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. 

ஊடகத்துறையில் 3வருட சேவையைப் பூர்த்தி செய்து 60வயதுக்கு கீழ்ப்பட்ட                    இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதிநேர ஊடகவியலாளர்கள், முழு நேர பணியில் ஈடுபடும் ஊடக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.  

இந்த இலகு கடன் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்குத் தேவையான ஊடக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியில்லா கடனை வழங்கவும், தன்னிடமிருக்கும் ஊடக உபகரணங்களின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள 150,000.00ரூபா வரையிலும் கடன்உதவிகளை வழங்க ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.  

எனவே விண்ணப்பங்களை பூர்த்திசெய்து ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...